தமிழ்ப்புலவர் கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டு எனும் நூலில் 99 வகையான குறிஞ்சி நில பூக்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் கிராமத்தில் அரசுப்பள்ளியில் படிக்கும் K. விதுன் (வயது 8) என்ற மாணவன் ஒரு நிமிடத்திற்குள் 99 வகையான பூக்களின் பெயர்களைக் கூறி அசத்தினார். மாணவனின் திறமையைப் பாராட்டி ஜக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட் (JBWR) என்ற நிறுவனம் உலக சாதனைப் புத்தகத்தில் மாணவனின் பெயரைப் பதிவு செய்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கம், கோப்பை வழங்கி பாராட்டியது.
இன்று பள்ளியில் 77 வது குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர், பெரியவரிகம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொணட அனைவரும் மாணவனைப் பாராட்டி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மாணவனுக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துகள்..
ஆர்வமும், விடாமுயற்சியும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் அனைவரும் சாதனையாளர்களே...!
ஆலமரவிழுதுகள்.நெட் சார்பாக வாழ்த்துகள்...!


