ஏப்ரல் 22உலக பூமி தினம்
(EARTH DAY)
(EARTH DAY)

உலகின் 900 கோடி மனிதர்க்கும் கணக்கிட முடியாத ஜீவராசிகளுக்கு உணவு மற்றும் உறைவிடம் அளித்துப் பேணிக் காத்து வருகிறது பூமி! அந்தப் பூமியைப் பற்றியும், அதைப் பாதுகாப்பது தொடர்பாக சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை! அந்த விதத்தில் உருவானதே உலக பூமி தினம்!
இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்பிடிக்கப் படுகிறது.
2016 ஆம் ஆண்டின் நோக்கம் "பசுமை நகரங்கள்!'
2017 ஆம் ஆண்டின் நோக்கம் "அற்புதமான தண்ணீர் உலகம்!'
2018 -- நடப்பு ஆண்டின் நோக்கம் "பிளாஸ்டிக் பொருட்களின் மாசை முடிவுக்குக் கொண்டுவருதல்'
புவி வெப்பமடைதல் என்பது உலக நாடுகள் சந்தித்து வரும் மிக முக்கியமான பிரச்னை. இதனால் பெரிய ப பனிப் பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரிக்கும். இதனால் பல தீவுக்கூட்டங்கள் மூழ்கிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்னும் சில ஆண்டுகளுக்குள் சுமார் 300 கோடி பேர் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயரக் கூடும் என்று ஓர் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.