
👉தோல்வியடைவதற்கு நான் வருத்தப்படவில்லை. நான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த பிறகு வரும் தோல்விக்கு நான் கவலைப்படுவதில்லை.
👉உங்களை மற்றவர்கள் மதிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படாதீர்கள். அவர்கள் உங்களை மதிக்கும் அளவு உயர்ந்து காட்டுங்கள்.
👉எதுவாக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அதில் சிறந்து இருங்கள்.
👉ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணி நேரம் அளிக்கப்பட்டால் அதில் நான்கு மணி நேரத்தை கோடாரியைக் கூர்தீட்டவே பயன்படுத்துவேன்.
👉நான் மெதுவாகத்தான் முன்னேறுவேன். ஆனால், முன்னேறிக்கொண்டே இருப்பேன்.
👉முழுமையாக ஒரு விஷயத்தை பற்றி அறிந்த பிறகு உங்கள் முயற்சியினை முன்னெடுங்கள்.
👉வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம்.
👉எல்லோருக்கும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையுண்டு, ஆனால் வயதாகாமல்.
👉எனக்கு கொள்கை என்று ஒன்று கிடையாது. செய்வதைச் செவ்வனே செய்ய வேண்டும் அவ்வளவே.
👉உதவும் எண்ணம் கொண்டவர் விமர்சிக்கத் தகுதியானவர்.
👉பாராட்டு - அனைவருக்கும் பிடித்த விஷயம்.
👉எதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஒருநாள் நமக்கான வாய்ப்பு வரும்.
👉நாம் செய்யும் ஒரு விஷயத்தை சிறந்ததாக்க நம்மால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும். 'முடிந்த அளவு" அதை கடைசி வரை கொடுக்க வேண்டும்.
👉கண்டிப்பை விட, அன்பே சிறந்த முடிவைத் தரும்.