மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 17 April 2019

ஆப்ரகாம் லிங்கனின் சாமர்த்தியம்!!


    ஆப்ரகாம் லிங்கன், அவரது பதவிக்காலத்தில் கடமையிலிருந்து தவறிய படைவீரர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். ஆயினும் ஒவ்வொரு சிப்பாயும், செல்வாக்குமிக்க ஒரு நபரிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று வரவேண்டும்.

   அனைவரும் சிபாரிசு கடிதம் கொண்டுவர, ஒரு படைவீரனின் கடிதம் மட்டும் தனிக் கடிதமாக இருந்தது.

   'அட! என்ன இது? இதனுடனிருந்த சிபாரிசுக் கடிதம் எங்கே?" என்று இதைக் கவனித்த ஆப்ரகாம் லிங்கன் ராணுவ அதிகாரியிடம் கேட்டார்.

    அவரும், அந்த வீரன் எந்தக் கடிதமும் இணைக்கவில்லை என்றார்.

   அட! மன்னிப்பு வழங்க முக்கிய நபரின் சிபாரிசுதான் வேண்டுமென்பதில்லை. யாராவது நண்பர், ஒரு ஆதரவுக் கடிதம் கொடுத்தால் போதுமே என்றார் ஆப்ரகாம் லிங்கன்.

   ராணுவ அதிகாரி, அதையும் நான் கேட்டுவிட்டேன். அவருக்கு நண்பர் எவருமே இல்லை என்று சொல்கிறார்.


   அப்படியா? நானே அவருடைய நண்பன் என்று சொல்லி அந்தப் படைவீரனுக்கு மன்னிப்பு அளித்தார்.

   குகன் என்னும் வேடனையே தம்பி என்று உறவுமுறை கொண்டாடினார் இராமர். அதுபோலவே, ஒன்றும் தெரியாத, முன்பின் அறியாத, ஒரு படைவீரனை ஒரு நொடியில் நண்பனாக்கி மன்னிப்பு அளித்தார், ஆப்ரகாம் லிங்கன்!

Pages