மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 15 April 2019

ஏன் வாக்களிக்க வேண்டும்?

என் வாக்கு என் உரிமை...!!

👆வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையாகும்.

👆நீங்கள் 18 வயது நிரம்பியவரா? உங்கள் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் உரிமை உங்கள் கையில். 

👆இந்த ஜனநாயக நாட்டில், மக்களுக்குரிய உரிமை வாக்களிப்பு. அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? 

சட்டமன்ற தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? 

இதற்கு முன் இருந்தவர்கள் என்ன செய்துள்ளனர்?

இனி வாக்களித்தாலும் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

👆என்பதை நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

👆தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும், ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுவது தான் அவசியமாகிறது.

தற்போது உள்ள சூழலில்,

👆வரிசையில் நின்று வாக்களிக்க நிறைய பேர் யோசிக்கிறார்கள்.


👆தேர்தல் நாள் அன்றுகூட முக்கியமான வேலையை வைத்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

👆கோயில்களில் கூடுதல் பணம் கொடுத்தால் சீக்கிரம் சிறப்பு தரிசனம் கிடைத்துவிடுகிறது.

👆திரையரங்குகளில் முன்பதிவு செய்து நேராக இருக்கைக்கு சென்று படம் பார்த்துவிடமுடியும்.

👆இப்படியே பழகிப்போனவர்களுக்கு வாக்களிக்க மட்டும் வரிசையில் நிற்கவேண்டும் என்றால் சிரமமாகத்தானே இருக்கும்.

👆அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்பவர்களை தீர்மானிக்க அரைமணி நேரம்கூட ஒதுக்கக்கூடாதா?

👆வாக்களிப்பது ஒரு முக்கியமான சமூகக் கடமை என்பதை உணர வேன்டும்.

ஏன் வாக்களிக்க வேண்டும்?

👆மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கும் ஒரு தலைமையை மாற்ற நாம் வாக்களிக்க வேண்டும்.

👆ஒரு நல்ல மாற்று அரசை தேர்ந்தெடுக்க நாம் வாக்களிக்க வேண்டும்.

👆ஒரு தொகுதியின் வளர்ச்சிக்கு உதவும் ஒருவரை தேர்ந்தெடுக்க நாம் வாக்களிக்க வேண்டும்.

👆நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் தீர்மானிப்பதும், செயல்படுத்துவதும் அரசாங்கமும், அரசியல்வாதிகளுமே. ஆதலால், சிறந்த நபரை தேர்ந்தெடுப்பது நம் அவசியமே.

👆வாக்களிக்கும் முன் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து வாக்களியுங்கள்.

👆நீங்கள் வாக்களிக்கும் நபர் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் நாட்டையும், நம் சமுதாயத்தையும் வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்தவர் என்பதை தெரிந்து வாக்களியுங்கள்.

நல்ல அரசாங்கம் அமைவதற்கு கண்டிப்பாக வாக்களியுங்கள்...!

நம் வாக்கு நம் உரிமை...

வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மறவாதீர்கள்.




சிந்தியுங்கள்.... வாக்களியுங்கள் !!

Pages