
வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படாத, தவிர்க்கப்பட்ட ஒரு குழுவாகவாகவே இந்த வீதியோரச் சிறுவர்கள் கணிக்கப்படுகின்றனர். அவ்வகையில் International Day for Street Children என்று ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி உலகமெங்கிலும் உள்ள வீதியோர சிறுவர்களுக்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நாளாக கொண்டாடப்படும் சர்வதேச நாளாகும்.
இன்று முழு உலகிலுமே வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பிரச்சினைகளுள் ஒன்று வீதியோரச் சிறுவர்கள் பற்றியது. ஏனெனில், தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலச் சந்ததி ஒன்று தனது எதிர்காலத்தைத் தொலைத்து வீதியில் நிற்கத் தலைப்பட்டு விட்டது. இத்தகைய நிலை அதிகரித்துச் சென்றால், முழு உலகின் எதிர்காலமும் கூட தலை கீழாக மாறி விடும் வாய்ப்பும் காணப்படுகிறது. சிறுவர்களுக்கான சகல உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. பல்வேறு வயதெல்லைகளைச் சேர்ந்த சிறார்கள் தமக்குத் தேவையான ஆதரவும் அரவணைப்பும் கிடைக்காததால் வீதிகளையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அத்தகைய சிறார்களை ஆதரவற்றவர்கள், வீதியோரச் சிறார்கள் எனப் பல்வேறுபட்ட வகைகளில் பாகுபடுத்திப் பார்க்கிறது இன்றைய உலகம். இதனை இந்தியா, மொராக்கோ, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளின் வீதியோர சிறுவர்களும், யூகே, அயர்லாந்து போன்ற நாடுகளின் பள்ளிச் சிறுவர்களும் கொண்டாடி வருகின்றனர்.அவ்வகையில் இவ்வாண்டுக்கான வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச நாளானது "சிறுவர்களுக்கான அடையாளம்" என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அவர்களுக்கான பாதுகாப்பு, கல்விக்கான தேவைகளுக்கான சந்தர்ப்பங்களின் போது அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், என்பவற்றின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளங்குகின்றது.