மரத்தில் கீறல் பட்டால் சிவப்பு திரவம் வெளிவரும் அதிசயம்😯😯!!

😯உலகில் எத்தனையோ அதிசயங்களும், விநோதங்களும், மர்மங்களும் இன்றும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இப்படி பல விநோதங்களும், மர்மங்களும் கொண்ட ஒரு அதிசய தீவைப் பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்...
😯பூமியிலுள்ள தீவுகளில் இந்தியப் பெருங்கடலில் உள்ள சோகோட்ரா தீவு ஏராளமான அறிவியல் புதிர்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. இந்த அதிசயத் தீவில் சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.
😯கடல் மட்டத்திலிருந்து 1525 மீட்டர் உயரத்தில் மலைகள் உள்ளன. இங்கு வளரும் மரங்கள், பல்லுயிர் தாவரங்களை உலகில் வேறெங்குமே காண முடியாது.
😯பார்க்கும் இடமெல்லாம் வித்தியாசமான வடிவம் கொண்ட விலங்குகள், மரங்கள், பறவைகள் என இத்தீவு முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிசயம் கொட்டிக் கிடக்கிறது.
🌲800-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்குள்ளன. இதில் 240 தாவர வகைகள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.
🌲இந்த அதிசய தீவில் டிராகன் மரங்கள் எனப் பெயரிடப்பட்ட மரங்கள் நிறைய உள்ளன. மரத்தில் எங்கேயாவது கீறல் ஏற்பட்டால் சிவப்பு வண்ணத்தில் திரவம் வெளிவரும்.
🐟இத்தீவின் கடற்கரையில் பிடிபட்ட பெரிய மீன், உலகில் இதுவரை எங்கும் பார்த்திராத புதியவகை மீன்.
🌳பாட்டில் ட்ரீ என்று அழைக்கப்படும் அடிப்பகுதி பருத்த மரங்கள், இத்தீவு முழுவதும் காணலாம்.
👉இப்படி பல விநோதங்களை கொண்ட இந்தத் தீவை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்தது.
👉எந்த அளவுக்கு இயற்கை வளம் இங்கே கொட்டிக் கிடக்கின்றதோ, அதே அளவுக்கு புதிர்களும் நிறைந்திருக்கின்றன. இதற்கான விடைகள் இன்றும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
👉இந்த அதிசயத் தீவை பற்றிய ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.