மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 26 January 2026

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு (99 மலர்கள்)

       சில பூக்களைத் தவிர பெரும்பாலான பூக்களை மறந்து இயற்கையை மறந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பண்டைய புலவர் ஒருவர் இயற்கையின் அனைத்து பொருட்களையும் நுணுகி ஆராய்ந்து அவற்றை எல்லாம் நூலில் தொகுத்து உரைப்பதும், குறிப்பாக மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தின்கண் பலகாலும் திரிந்து கண்டு கேட்டு நுகர்ந்து மரமும் கொடியும் செடியும் புல்லும் பூண்டும் முதலுமாய் அடர்ந்து காட்டுள் சென்று வண்ண வண்ண மலர்களை மனத்தாலும் விளங்கிக் கொண்டு பெருமையை வியந்து குறிஞ்சிப் பாட்டு நூலின் உரையாசிரியர் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.


 இயற்கையின் கருப் பொருட்களான மரம், செடி கொடி, பூக்கள் என தாவரங்களையும் இன்ன பிறவற்றையும் இயற்கையின் அழகு ஓவியங்களையும் எடுத்துரைத்த புலவர்களில் கபிலர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவராக காணப்படுகிறார். 

 கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்களின் தமிழ் பெயர்களும் பூக்களும்


    கபிலர் தமிழ்ச்சங்கப் புலவர்களில் மிக புகழ் பெற்றவர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இவரால் அதிகமான சங்கபாடல்கள் பாடப்பெற்றுள்ளது. இவர் பாடிய 200 க்கும் மேற்பட்ட பாடல்களில் பத்துப்பாட்டு எனும் நூலில் இடம்பெறும் குறிஞ்சிப்பாட்டும் ஒன்று. இப்பாடலில் மூலம் இரே இடத்தில் ஒரே தடவையில் 99 வகையான தாவரத்தின் பெயர்களை பட்டியல் இட்டிருப்பதன் மூலம் கபிலர் காவியங்களின் மட்டுமல்ல தாவரவியலின் அறிஞராகவும் திகழ்ந்தவர்.


குறிஞ்சிப்பாட்டு மலர்கள்


மலர்களைப் பறித்த தலைவியும் தோழியும்


. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்,

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 70

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், 75

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்,

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

தாழை, தளவம், முள் தாள் தாமரை 80

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி

கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,

காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், 85

ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,

அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,

தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி, 90

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக்கத்தி,

ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,

மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும் 95

அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்

மால் அங்கு உடைய மலிவனம் மறுகி

வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇ (61-98)

Pages