மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 25 July 2026

தேசிய அளவில் ஓவியத் திறமையை நிரூபித்த பெரியவரிகம் பள்ளி மாணவன் (K.BALAMURUGAN)

 


        JACKHI BOOK OF WORLD RECORD  நிறுவனம் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்க தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகின்றனர். JBWR சார்பாக தேசிய அளவிலான ஓவியப்போட்டி (ART - A - THON) கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.


       திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், பெரியவரிகம் அரசுப் பள்ளியில் தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் K.பாலமுருகன் என்ற மாணவர் JBWR ன் ART - A - THON போட்டியில் கலந்து கொண்டு SOCIAL FRIENDS என்ற தலைப்பில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.



       அந்த தேசிய அளவிலான ஓவியப்போட்டியில் மாணவனின் ஓவியம் முதல் பத்து சிறந்த ஓவியங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.


      மாணவனின் திறமையைப் பாராட்டி ஜக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட் தங்களது உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் மாணவருக்குப் பாராட்டுச் சான்றிதழ், கோப்பை மற்றும் மெடல் வழங்கி பாராட்டி உள்ளனர்.


    பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் மாணவரைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.


   மாணவர் வாழ்வில் மென்மேலும் சாதனைகள் செய்ய www.alamaravizhuthugal.net  சார்பாக வாழ்த்துகள்.....

Pages