JACKHI BOOK OF WORLD RECORD சார்பில் ஆத்திச்சூடி 5 நிமிட சவால் என்ற தலைப்பில் குறைந்த நேரத்தில் ஔவையார் மற்றும் பாரதியார் ஆத்திச்சூடிகளை மனப்பாடமாக ஒப்புவிக்கும் உலக சாதனை மற்றும் போட்டி நடத்தப்பட்டது.
அந்த போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம், பெரியவரிகம் அரசுப்பள்ளி மாணவி S.சோபிகா (வகுப்பு 6) கலந்து கொண்டு 109 ஆத்திச்சூடிகளை 1 நிமிடம் 50 விநாடிகளில் கூறி சாதனை படைத்தார். மாணவியின் திறமையைப் பாராட்டி JACKHI BOOK OF WORLD RECORD நிறுவனம் JBWR ல் பதிவு செய்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்கள்.
பள்ளியின் சார்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என அனைவரும் மாணவியைப் பாராட்டினர்.
ஆலமரவிழுதுகள்.நெட் சார்பாக மாணவி மேலும் பல சாதனைகளை செய்து வெற்றி பெற மனமகிழ் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்...!
