மாணவர்கள் எழுதிய கதை 1:
ஓர் காட்டில் ஒரு குடும்பம்... சிட்டுக்குருவிகள் அது. சிறிது தூரத்தில் ஒரு குளம். அதில் முதலைகள் வாழ்ந்து வந்தது. சிட்டுக்குருவிகள் அங்கு தினமும்சென்று நீர் குடித்து வரும். ஒரு நாள் முதலைக்கு பேராசை வந்தது.
அது தன் நண்பனிடம் கூறியது. "நண்பா சில சிட்டுக்குருவிகள் தண்ணீர் குடிக்க இங்கு தான் வருகிறது. அப்பொழுது நாம். அதை பிடித்து சாப்பிடலாம். மேலும் காட்டில் காய்ந்த மரங்கள் கீழே விழும் . அப்பொழுது அதை எடுக்க சிட்டுகுருவிகள் வரும். அப்யொழுது நம் அதை பிடித்து சாப்பிடலாம் ” என்று கூறியது நன்பர் "சரி நண்பா" என கூறியது.
இதை கேட்ட ஒரு சிட்டுக்குருவி உடனே அனைவரையும் அழைத்து ஒரு இடத்தில் ‘சிட்டுக்குருவி கூட்டம் என்ற அமைப்பை தொடங்கியது. அதில் அனைத்து சிட்ருெருவிகளும் கலந்து கொண்டன. நடந்ததை கேட்ட சிட்டுக்குருவிகள் எல்லாம் கோபம் அடைந்தது. வாருங்கள் அதற்கான தண்டனை வழங்குவோம். என்று கூறினர்... பொறுமையாக இருங்கள் அவசரபட்டால் எதுவும் சரியாக நடக்காது. பொறுமையாக இருக்க வெண்டியது மிக அவசியம். என்று கூறியது சிட்டு.
சிறிது நேரம் கழித்து முதலையின் குரல் கேட்டது. காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், எனக் கத்தியது. உடனே அனைத்து சிட்டுக் குருவிகளும் சென்று பார்த்தன. முதலையின் மேல் மரக்கட்டை ஒன்று விழுந்து இருந்தது. அதை பறத்த சிட்டுக்குருவி உதவி செய்ய செல்லும் போது மற்ற அனைவரும் போகாதே... இது நம்மை சாப்பிட திட்டமிட்டுள்ளது. நீ அதை ஏன் காப்பாற்றுகிறாய் என்று கூறினர். அதற்கு முதலை "தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்" எனக் கூறியது.
அதற்கு சிட்டுக்குருவி "என் அன்னை எனக்கு கூறியது... ஒருவர் தவறு செய்தால்.. அதே தவறை நாமும் செய்யக் கூடாது. தவறை உணர்த்தி மன்னிப்பு வழங்க வேண்டும்.." என்று கூறியது. இதை கேட்ட சிட்டுக்குருவிகள் அதற்கு உதவி செய்தன. முதலையின்மேல் இருந்த மரக்கட்டையை எடுத்தார்கள். முதலை சிட்டுவைப் பார்த்து " நன்றி நண்பர்களே... மேலும், நான் அன்று உங்களை சாப்பிட்ட திட்டம் போட்டேன். என்னை மன்னியுங்கள்." என்றது. "நீ செய்த தவறை திருத்திக்கொண்டாய். உன்னை போல் இந்த உலகத்தில் அனைவரும் இருக்கவேண்டும். அப்பொழுது இந்த உலகம் நன்றாக இருக்கும்... மிகவும் மகிழ்ச்சி.." எனக்கூறி பறந்தது. மேலும் சிட்டுக்குருவி, காடு குளம் ஆகியவை மகிழ்ச்சியாக வாழ்ந்தது.
நன்றி வணக்கம்
கதை எழுதியவர்:
மு.முத்தமிழன்,
எட்டாம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பெரியவரிகம்.
