மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 29 April 2026

சிட்டுக்குருவியின் ஆசை ( M.ஈஸ்வரன்)




        என் பெயர் ஈஸ்வரன். ஆறாம் வகுப்பு படிக்கிறேன். நான் சிட்டுக்குருவி கதை சொல்கிறேன்.




         ஒரு காட்டில் சிட்டுக்குருவி இருந்தது. அதற்கு பொறாமை அதிகம். அதில் ஒரு கதை சொல்கிறேன். ஒருநாள் சிட்டுக்குருவி காட்டில் சென்று கொண்டிருந்தது. திடீரென தாகம் எடுத்தது. அங்கே ஒரு குளத்தைப் பார்த்தது. குளத்தில் நீர் அதிகமாக இருந்தது. நீர் குடிக்கும்போது அதன் முகம் நீரில் தெரிந்தது. "என்ன முகம் இது? நான் அழகாகவே இல்லை. அம்மாவிடம் சொல்ல வேண்டும். அம்மா வேறு காட்டில் இருக்கிறார்கள். எப்படி சொல்வது? கடகதம் எழுதலாம்..." என நினைத்து கடிதம் எழுதியது.




09.03.2026.

சஞ்சீவி மலைக்காடு.




அன்புள்ள அம்மா...

           நான் நலம். அங்கு நீ நலமா? அம்மா நான் அழகாகவே இல்லை. என் நண்பர்கள் மிக அழகாக இருக்கிறார்கள். கிளியின் மூக்கு எவ்வளவு அழகாக உள்ளது தெரியுமா? பழம் தின்னும் அழகே அழகு.

       மயில் .... அப்பப்பா... அதன் தோகை. எவ்வளவு அழகு. தோகையின் வண்ணங்கள் அழகு.

          குயிலின் குரலைக் கேட்டால் ..... கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனால் நான் மட்டும் அழகாகவே இல்லை. நான் கடவுளிடம் தவம் இருக்கப் போகிறேன். அழகாக மாறுவேன்.




இப்படிக்கு

சின்ன சிட்டு.




இரவு வந்தது. மறுநாள் காலையில் அம்மாவிடம் இருந்து கடிதம் வந்தது.




அன்புள்ள சின்னசிட்டு,

       நான் நலம். கடவுள் படைப்பில் அனைவரும் அழகுதான். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது. உன்னிடம் உள்ள திறமையைக் கண்டுபிடி. அதை வளர்த்துக்கொள். லட்சியத்தை அடைவாய். அடுத்தவர்களுடன் ஒப்பிடாதே...




இப்படிக்கு

பெரிய சிட்டு.




       ஆனால் அம்மா பேச்சை சிட்டுக்குருவி கேட்கவில்லை. கடவுளிடம் தவம் இருந்தது. கடவுளிடம் வந்தவுடன் வரம் கேட்டது. தற்போது கிளி வாய், மயில் தோகை, குயிலின் குரல் என அனைத்து பறவைகளின் அழகும் சிட்டுக்குருவிக்கு வந்துவிட்டது.




        சிட்டுக்குருவிக்கு சந்தோஷம். வேகமாக அம்மாவைத் தேடி சென்றது. " அம்மா.. அம்மா..." ஆவலுடன் அழைத்தது. ஆனால் பாவம்... அம்மா சிட்டுவுக்கு அடையாளம் தெரியவில்லை. " நீ யாரென்று எனக்கு தெரியாது. வெளியே போ." என விரட்டிவிட்டது.




        சிட்டுவுக்கு கண்ணீர் வந்தது. என் அம்மாவிற்கே என்னை அடையாளம் தெரியவில்லை.. நான் என்ன செய்வேன்.." என புலம்பியது.




        கடவுளே என்னை மன்னித்துவிடு. மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படமாட்டேன். எனது திறமையை மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு வளர்த்துக்கொள்வேன். என்னை பழையபடி மாற்றிவிடு" என வேண்டியது.



கருத்து: 
           மற்றவர்களைக் கண்டு பொறாமைப்படாதே. உனது திறமையை வளர்த்து கொள். உன் வளர்ச்சிக்கு உதவுபவர்களை என்றும் நினைவில் வை. உன்னை மட்டம் தட்டுபவர்களுக்கு உன் வளர்ச்சியால் பதிலடி கொடு.

Pages