திருப்பத்தூர் மாவட்டம், பெரியவரிகம் அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி T. சாருலதா.
படிப்பில் மட்டுமல்ல... அழகான படம் வரைவதிலும் படுசுட்டி. இவரின் ஆங்கில கையெழுத்தைப் பாராட்டி JBWR நிறுவனம் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கி உள்ளது.
தற்போது Child Dream Booster Hub (Authorised by MSME), New Delhi சார்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவி, under the sea என்ற தலைப்பில் அசத்தலான ஓவியம் வரைந்தார்.
மாணவியின் ஓவியத்திறமையைப் பாராட்டி Child Dream Booster Hub நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பை, மெடல்கள் வழங்கினார்கள்.
The Indian Art Fest அமைப்பு சான்றிதழ் வழங்கி பாராட்டி உள்ளனர்.
மேலும் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் மாணவியைப் பாராட்டினார்கள்.
ஆலமரவிழுதுகள் சார்பாக மாணவி மேலும் பல சாதனைகளையும், வெற்றிகளையும் பெற மனமகிழ் வாழ்த்துகள்.....

